Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » நேர்வழியை அறிந்து கொள்ள இஸ்லாம் கூறும் அறிவுரை

நேர்வழியை அறிந்து கொள்ள இஸ்லாம் கூறும் அறிவுரை

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய அனைத்து வழிகேடுகளும் குர்ஆன் ஹதீஸ் பெயரில் தான் உருவானது.

நவீன வழிகேடுகளை விட்டு எம்மை பாதுகாத்து நேர்வழியை அறிந்து கொள்ள குர்ஆன் ஹதீஸ் படி வாழ்ந்து மரணித்த நம் முன்னோர்களை (ஸலபுஸ் ஸாலிஹீங்களை) அல்லாஹ் சிறந்த முன்னோடியாக நமக்கு ஆக்கியுள்ளான்.

1400 வருட காலங்களில் சத்திய கொள்கையாக இல்லாத ஒன்று இன்று நுணுக்கமான ஆய்வுகளால் சத்தியம் ஆகிவிடாது.

நமக்கு முன்னர் சத்தியத்தில் வாழ்ந்து மரணித்தவர்கள் பலர் மறுமை வரை சத்தியத்தில் அன்று தொடக்கம் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்பது நவீன கொள்கைகளை அறிந்து அதிலிருந்து எம்மை காத்துக்கொள்ள இஸ்லாம் கூறும் சிறந்த அடிப்படையாகும்.

குர்ஆன் ஹதீஸ் தான் எம் கொள்கை என்று கோஷமிடும் பிரிவுகள் அனைத்தும் அந்த கோஷத்தினூடாக சத்திய வாதிகள் ஆகிவிட முடியாது அவர்கள் பயணிக்கும் பாதையை வைத்து இந்த அடிப்படையினூடாக அவர்களில் யார் சத்திய வாதிகள் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

ஐவேலை தொழுகைகளில் ஒவ்வொரு ரக்அத்திலும் அல்லாஹ் எமக்கு கேட்குமாறு கட்டாயப்படுத்தி உள்ள பிரார்த்தனை இதற்கான சிறந்த சான்றாகும்

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏

நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
(அல்குர்ஆன் : 1:6)

صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
(அல்குர்ஆன் : 1:7)

✍இன்திகாப் உமரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *