Featured Posts
Home » பொதுவானவை » Coronavirus disease (COVID-19) » அஸ்தி பற்றித் தீர்ப்பு வழங்கிய உலக அறிஞர்கள் சபைத் தலைவர்!? !?

அஸ்தி பற்றித் தீர்ப்பு வழங்கிய உலக அறிஞர்கள் சபைத் தலைவர்!? !?

தம்பிகளே… உஷார்!

கொரோனா தொடங்கியதும் வீடுகளில் தொழுவது தொடர்பாக சவூதி அறிஞர்கள் சபை தூர நோக்கோடு எடுத்த மார்க்க ரீதியான, அதுவும் இஜ்திஹாத் தொடர்பான ஒரு முடிவை கேணத்தனமாக தென்னிந்தியாவில் இருந்து கொண்டு பரிகாசம் செய்தார், பீ.ஜே.

அண்ணனின் இலங்கைத் தம்பிகளோ ஜம்மியத்துல் உலமாவின் நல்ல முடிவைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாக ஏதோ புலம்பினர்.

இறுதியில் ஞானம் பிறந்து, “முடியுமான அளவு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!” அரச சட்ட நிர்ப்பந்தம் போன்ற கற்றறிந்த அறிஞர்கள் சொன்ன காரணங்களையும் இறைமறை வசனத்தையும் ஆதாரமாக தமது ஆட்டு மந்தைகளுக்கு
முன்வைத்தும் CPJ குழுவுக்கு அதன் செயலாளர் அறிவுறுத்தி, வீடுகளில் அடங்கிக் கிடந்த கையோடு, முஸ்லிம் ஜனாஸாவின் சாம்பல் விவகாரம் சூடுபிடித்தது.

இலங்கை அறிஞர்கள் தமது நிலைப்பாட்டை மேற்படி குர்ஆன் வசனத்தையும் அதன் பொருளில் அமைந்த குர்ஆன் வசனங்கள், மற்றும் ஹதீஸ்களை முன்வைத்து எடுக்கப்பட்ட சட்ட விதியின் அடிப்படையில் சாம்பலைப் புதைப்பது நல்லது என்ற கருத்தை வெளியிட்டனர்.

10/04/2020 அன்று இரவு அண்ணன் புறப்பட்டார்?

அண்ணனுக்கும் நமக்கும் எந்த உறவுமில்லை எனப் பொய் கூறி, திரைமறைவில் அண்ணன் தக்லீதுக்கு முன்னுரிமை வழங்கி SLTJ என்ற அமைப்பில் இருந்து வெளியேறி CTJ என்ற ஓர் ஆங்கில எழுத்துக் குறைவான மற்றொரு புதிய ஜமாஅத்தை உருவாக்கி, அண்ணன் வழியை நபிவழி போல நம்பி நடக்கும் தம்பிகள் தன்னிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே அண்ணன் தனது பதிலைப் பதிவு செய்துள்ளார் என்பது அவரது விளம்பரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.

அண்ணனைப் பற்றி அண்ணன்

தானே உலக அறிவாளி, தனக்கே எல்லாம் விளங்கும். தான் கூறுவதே சரி, நபித்தோழர்களுக்கு கூட விளங்காதது தனக்கு மாத்திரமே புரியும், நபித்தோழர்கள் தமக்குள் சண்டை பிடித்தவர்கள்தானே! அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என பதவி ஆசையில் இருந்தனர் என ஷீஆக்கள் போல கொஞ்சம் கூட கலீஃபாத் தெரிவு, நபித்தோழர் சிறப்பு, மரியாதை பற்றிய அறிவுப் பின்னணி எதுவும் இன்றி, முரண்பாடுகளை அணுகும் நாகரிகம் இல்லாமல் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் என குதர்க்கவாதம் பேசி ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை வழிகெடுத்துக் கொண்டிருந்த வேளையில் இறையச்சமில்லாமல் பாரிய குற்றத்தில் மாட்டிக் கொண்டு தனது ஜமாத்தில் இருந்து விரட்டப்பட்டு, தலைமறைவாக ஒரு மூலையில் அடங்கி, அமர்ந்து, எனக்கேற்பட்ட கேடே! என கைதேசப்பட்டுக் கொண்டு அப்பப்ப சிற்சில வீடியோக்களை வெளியிட்டு வந்த அண்ணன் அவர்கள், கொரோனா விஷயத்தில் இலங்கைத் தம்பிகளுக்கு முட்டுக் கொடுப்பதற்காக அவரது அரைவேக்காட்டு வாதத்தை முன்வைத்து விட்டார்.

இனி என்ன ? வஹி வந்தது போல தம்பிகள்!
தம்பிகளின் ரசிகர்கள் அதில் தோணி ஓட்டுவார்கள். அவரது விளக்கம் மார்க்க அறிவில் ஆளமில்லாத பாமரர்கள் பலர் இதுவல்லவா?! விளக்கம் எனப் புகழும் நேரத்தில், அவரது விளக்கதில் நாம் காணும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது இங்கு அவசியமாகும்.

விஷயம் என்ன?

பொதுவாக மனிதர்கள் கண்ணியமானவர்கள் என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டதன் பின்னணியில் மரணமானவர் காஃபிரோ? முஃமினோ? எவராக இருந்தாலும் அவர்கள் எரிக்கப்படுவதைக் கூடாது என இஸ்லாம் தீர்ப்பளித்துள்ளது

கொலை, கொள்ளை போன்ற தக்க காரணமின்றி உயிர்களைக்
கொல்லக் கூடாது என்ற சட்டமும் இந்த அடிப்படையில் அமைந்ததாகும்.

ஜனாஸா எரிப்பைக் கண்டிக்காத அண்ணன்

ஐவேளை தொழாதவர் என அவரது ஜமாஅத் உறுப்பினர்களே உறுதி செய்யும் பீ.ஜே. கொரோனா தொடர்பாக இஜ்திஹாதின் அடிப்படையில் வெளிவந்த வீடுகளில் தொழுவது பற்றிய சவூதி உலமாக்களின் அங்கீகரிக்க முடியுமான தீர்ப்பை இறைமறுப்பை போன்று நையாண்டி செய்து வீடியோ வெளியிட்டு, ரோஷப்பட்டு எவ்வளவு கடுமையாகப் பார்த்தாரோ, பரிகாசம் செய்தாரோ அதைவிடப் பன்மடங்கு இலங்கையில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது (WHO)வின் அறிக்கைக்கு மாற்றமானது என்று தனது கண்டனத்தை முதலாவது வெளியிட்டிருக்க வேண்டும்.

இதில் அவர் அசமந்தப் போக்கில் இருப்பது தம்பிகளின் அரசோடுள்ள மறைமுக உறவில் விரிசல் ஏற்படலாம் என அஞ்சியதனாலா என்ற என் சந்தேகம் எழுகின்றது.
(அல்லாஹ் அறிந்தவன்)

அதை விடுத்து, என்னமோ சாம்பலைக் குளிப்பாட்டி, கஃபனிட்டு அடக்கம் செய்ய வேண்டும் என இலங்கை அறிஞர்கள் கூறியது போல தனது மேதாவித்தனத்தை நிலைநாட்ட மத்ஹபுகளை ஊறுகாயாகத் தொட்டுக் கொண்டு, தனது கருத்தை வெளியிட்டு, அறிவற்றோரிடம் மீண்டும் அறிவாளிச் சான்றிதழ் பெற்றுக் கொண்டார்.

இவர் தனது வாதங்களை குர்ஆன், சுன்னாவில் இருந்து நிறுவாது, பிற்பட்ட காலத்தில் குழப்பமான நிலையில் நடந்த சில கொலைச் சம்பவங்கள், சடலம் எரிப்புக்கள் போன்ற வழரலாற்று நிகழ்வுகள் மூலம் தனது கருத்தை நிறுவும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது குர்ஆன் சுன்னாவில் இது பற்றிய நேரடியான கட்டளைகளோ, தடைகளோ இடம் பெறவில்லை என்பதை உணர்த்தப் போதுமானதான ஆதாரமாகும்.

அது மாத்திரமன்றி, நபித்தோழர்களின் விளக்கமா ? தூக்கிப்போடு குப்பையில் என; குதர்க்கம் பண்ணி வந்த அண்ணனுக்கு இப்போது மட்டும் இஸ்லாமிய வரலாறும், தானே மறுப்பதாகக் கூறும் புகாரியில் இடம் பெறும் அல்லாஹ்வைப் பயந்து தன்னை எரித்து, தனது சாம்பலைக் கடலில் தூவி விடுமாறு தனது பிள்ளைகளிடம் பணித்த மனிதரின் செய்தியும் எப்படி ஆதாரமாகிப் போனது?

மற்றவர்கள் நம்பிக்கைப்படி தனது வாதத்தை நிறுவாமல் தனது நம்பிக்கைப்படி வாதத்தை நிறுவ வேண்டும் அல்லவா? அதுதான் அண்ணாவின் வழிமுறையில் இல்லையே!

ஜனாஸா அடக்கப்படவேண்டுமே தவிர, எரிக்கப்படக் கூடாது

ஒரு மையித்தின் எலும்பை உடைப்பது அதனை உயிரோடு உடைப்பது போன்றது ( அபூதாவூத்- இப்னு மாஜா) என்ற இறைத் தூதரின் வரிகளை ஆதாரமாகக் கொண்டு ஜனாஸா எரிக்கப்படுவது “ஹராம்” என இலங்கை அறிஞர்கள் சொன்னதை
இவர் என்னமோ அறிஞர்களிடம் இருந்து காப்பி அடீ; அடீ என அடித்து பிறரின் கருத்துக்களைக் அடிக்காதவர் போல தனது வழமையான கேடு கெட்ட போக்கைப் போன்று இலங்கை அறிஞர்களையும் பரிகாசம் வேறு செய்து, இது யாரோ எழுதி வைத்ததை இவர்கள் கூறுகின்றனர் எனக் கேலியும் கிண்டலும் செய்து தனது கருத்தை வெளியிடும் இவர் ஏதோ வானத்தில் இருந்துதான் தனது விளக்கங்களை முன்வைக்கின்றார் போலும்!

ஆபாச ஆடியோவுக்குள் சிக்கியவருக்கு இறையச்சம் என்பதுதான் இல்லை, இஸ்லாமியப் பண்பாடுமா இல்லை? சரி குறைந்தது மனிதப் பண்பாடாவது இல்லாத நாகரிகமற்ற ஒரு வழிகேடன் அறிஞனாகப் பார்க்கப்படுவது மறுமை நாளின் அடையாளமா இல்லையா?

இப்படி இவரைப் போன்ற பண்பாடற்ற வழிகேடர்கள் தமிழ் உலகில் இருக்கவே மாட்டார்கள் போலும்.

இதற்காகவே அண்ணன் பற்றி அண்ணன் எனத் தலைப்பிட்டு சில விஷயங்கள் எழுதப்பட்டது.

சட்டவிதி :

?
கஷ்டத்தில் இயலுமானதைச் செய்தல் என்ற விதியின் அடிப்படையில், சாம்பலை புதைக்கலாம் என்ற சட்ட விதியைச் சொன்னவர் பேராசிரயராகத் தரம் உயர்வு பெற்ற கலாநிதி அஷ்ரஃப் ஆவார்.

இவர் 2001 ம் ஆண்டு கப்ரு வணங்கிளான ஹுப்புக்களோடு BMICHல் நடந்த விவாதித்ததில் பீ.ஜே. உடன் பங்கேற்றவர்களில் ஒருவர்.

இவரிடம் “எங்களுக்கு உசூல் ஹதீஸ் பாடம் நடத்துங்கள்” என பீ.ஜே.
கூறியதை நான் எனது காதுகளால் செவிமடுத்தேன்.

இவ்வாறு வேண்டிக் கொண்ட பீ.ஜே , டொக்டர் அஷ்ரஃப் ஜின் போன்ற திறமைசாலி என அவரைப் புகழ்ந்தார். அவர்தான் இந்த சட்ட விதியைச் சொன்னவர்.

டாக்டர் அஷ்ரஃபின் உசூல் ஹதீஸ் பாடம் அப்போது விளங்கும்! சட்ட விதிகள் இப்போது விளங்காதோ? ஏன் உங்கள் கருத்துக்களை எதிர்த்துப் பேசினார் என்பதனாலா?

சட்ட விதிகள் பற்றி விளங்கும் சக்தி இல்லை என்றால் அதென்ன விதி எனக் கடாசிவிட்டு உதாசீனம் செய்வதுதான் நல்வழியா? அல்லது அது பற்றிய தெளிவைத் தேடுவதா நாகரீகம் ?

சரி நீங்கள் சத்திய முறிவு பற்றி சொன்ன விஷயம் ஒன்று முடியாத போது மற்றொன்று கொடுக்க வேண்டும் எனத் தெளிவாக குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

தெளிவாகக் கூறப்பட்டுள்ளதில் ஒன்று முடியாது போனால் மற்றொன்றைச் செய்ய மார்க்கம் அனுமதி அளிக்கின்றது என்பது அர்த்தமாகும்.

இவர்கள் முன்வைப்பது கூறப்படாத ஒன்றைப் பற்றியாகும். நீங்கள் கூறுவது மட்டும் சரி. மற்றவர்கள் கூறும் மார்க்கத்திற்கு முரண்படாத ஒன்று எப்படிப் பிழையாகும்,?

எரிவூட்டப்பட்ட உபைதுல்லாஹ் பின் சியாதின் சடலம் ஆதாரமாகுமா?

ஹுஸைன் (ரழி) அவர்களைக் கொலை செய்த கொடியவன் இப்னு ஸியாத்தையும் அவனது படையினைரையும் இப்னுல் அஷ்தர் கொலை செய்து அவர்களின் சடலங்களை எரித்தான் என்பது

تحفة الأحوذي شرح سنن الترمذي
مناقب الحسن والحسين رضي الله عنهما

என்ற நூலில் இடம் பெறும் மேற்படி சம்பவம் பீ.ஜே. கூறாத மற்றொரு நூலிலும் உண்டு.

பீ.ஜே கூறும் சம்பவம் ஆதாரமாகுமா?

இப்னு ஸியாதை எரித்த சம்பவத்தை எடுத்துக் கூறி சடலம் எரிக்கப்பட்டது; புதைக்கப்பவில்லையே என்ற வாதம் முதலில் எவ்வாறு தவறான வாதமாகும் என்பது ஒரு புறம் இருக்க ; இது போன்ற வரலாற்றில் இருந்து தனது கருத்தை நிறுவ முயற்சிப்பது நபித்தோழர்களையே ஆதாரமாகக் கொள்ளாத அண்ணன் போன்றவர்களுக்கு அழகானதா? என்ற கேள்வியும் எழுகின்றது .

குர்ஆன், ஹதீஸ் மாத்திரம் போதும் எனக் கூறும் இவர், இந்த சரித்திரத்தை ஆதாரமாக எடுப்பது நகைப்புக்குரிய காரியமாகும்.

இதே பீ.ஜே. வேறு சந்தர்ப்பங்களில் தமக்குள் வெட்டிக் கொண்ட, சண்டை செய்து கொண்டவர்களையா முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் ? எனக் கேட்டது போன்று தனக்கு தேவைப்படும் வேறு சந்தர்ப்பங்களில் பிணங்களை அடக்காமல் எரித்தவர்களையா? நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் ? எனவும் கேட்பார். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

இவரது விளக்கத்தை அங்கீகரிக்கும் பட்சத்தில் ஒருவரைக் கொலை செய்து விட்டு, அவரை அடக்குவதற்குப் பதிலாக எரிக்கலாம் என்று விளங்கலாமா? இவரைப் போன்று அனைவரும் விளங்கினால் சண்டைகளின் போது, சடலங்களின் நிலைமைகள் என்னவாகும் என சிந்திக்க வேண்டும்.

இவரது ஏறுக்கு மாறான விளக்கத்தின் அடிப்படையில் நோக்கினால், புனித மக்காவில் தன்னை ஆட்சியாளராகப் பிரகடனப்படுத்திய அப்துல்லாஹ் இப்னு சுபைர் அவர்களை
அநியாயக் காரரான ஹஜ்ஜாஜ் பின் யூசூஃபால் கொலை செய்து கழுகுமரத்தில் ஏற்றிவைக்கப்பட்டார்கள்.

அதனை கவலையோடு நோக்கிய இப்னு உமர் (ரழி) அவர்கள் அவரது தாய் அன்னை அஸ்மாவிடம்

إن هذه الجثث ليست بشيء إنما الأرواح عند الله . ( سير أعلام النبلاء للذهبي )

இந்த உடல்கள் ஒன்றும் இல்லை. உயிர்கள் தாம் அல்லாஹ்விடம் போய் விட்டனவே.(சியர்- அத்தஹபி) எனக் கூறியதை ஆதாரமாகக் கொண்டு, சடலங்களை அடக்காமல் விட்டுவிட வேண்டும் என விளக்கம் எடுக்கலாமா?

இஸ்லாமிய வரலாற்றில் நபி (ஸல்) அவர்களைக் கேவலமாகப் பேசிய ஒரு கிரிஸ்தவர் தவ்பாச் செய்து, அதில் இருந்து வாபஸ் பெறவில்லை என்பதற்காக கொலை செய்யப்பட்டு அவரது சடலம் எரிக்கப்படும் என மாலிகி மத்ஹப் அறிஞர் தீர்ப்பு வழங்கி அவ்வாறு எரிக்கப்பட்டதாக இடம் பெறுவது போன்ற வரலாற்றைக் கூறினால்,

( إنباء الغمر بأبناء العمر لابن حجر العسقلاني / كلمة. أحرقت جثته)

அந்த அறிஞர் சொன்னாலும் உனக்கு மூளை எங்கே எனக் கேட்டு மக்களை மடையர்களாக்கியவர் குழப்பமான நேரத்தில் இரு அணிகள் மத்தியில் நடந்த இவ்வாறான சரித்திரத்தை தனக்கு சாதகமாக இருக்கும் போது ஆதாரமாக எடுப்பது எவ்வளவு பெரிய மோசடி என சிந்திக்க வேண்டும்.

இவரது ஏனைய அணுகுமுறைகளும் இப்படித்தான் இருக்கும் என்பதை நுணுக்கமாக அறிந்து கொண்டால், இவர் தொடர்பான வழிகேடுகளை மிக எளிதாக இனம் கண்டு கொள்ள முடியும்.

?பொய் நபியாகத் தன்னை வாதிட்ட முக்தாருஸ் ஸகஃபி என்பவனை “அவர்” என தனது உரையில் மரியாதையாக விழிப்பது இஸ்லாமிய வரலாற்றில் இவரது அறிவின் ஆழம் பற்றிப் புரிந்தது?

கொலை செய்யப்பட்டு, எரித்து, யூப்பிரட்டீஸ் நதியில் சாம்பல் வீசப்பட்ட மன்சூர் அல்கல்லாஜ்

“நானே அல்லாஹ்” எனக் கூறிய மன்சூர் அல்-கல்லாஜ் என்ற அத்வைதி கொலை செய்யப்பட்டது பற்றிய வரலாற்றுத் தொடரில் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் :

ثم قطعت يده وجز رأسه وأحرقت جثته وألقي رمادها في دجلة ( ابن كثير/ البداية والنهاية )

அவனது கரம் துண்டிக்கப்பட்டது. அவனது தலைவேறாக வெட்டி எடுக்கப்பட்டது. அவனது சடலம் எரிக்கப்பட்டு, (தஜ்லா) யூப்பிரட்டீஸ் நதியில் வீசப்பட்டது எனக் குறிப்பிடுகின்றார்கள். (அல்பிதாயா வந்நிஹாயா)

இதனை ஆதாரமாகக் கொண்டு சடலங்களை எரித்துக் கடலில் தூவி விட வேண்டும் என எவனாவது சட்டம் எடுப்பானா?

இப்படித்தான் இவர் ஹுஸைன் (ரழி) அவர்களின் கொலையாளிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டன, புதைக்கப்படவில்லை.

எனவே, அப்படியே தற்போது எரிக்கப்படும் முஸ்லிம் ஜனாஸாக்களும் கணக்கில் கொள்ளப்படல் வேண்டும் என வாதிடுகின்றார்.

இப்னு சியாதின் சாம்பலை அடக்கம் செய்யவில்லை என்பதனால் சாம்பலுக்கு சட்டம் இல்லை என எடுத்துக் கொண்டால் மன்சூர் அல்கல்லாஜின் சாம்பல் -தஜ்லா- யூபிரட்டீஸ்- நதியில் தூவி விடப்பட்டது. எனவே, சாம்பலை தூவி விட வேண்டும் என்பதா சட்டம் எடுப்பாரா ?

அப்படியானால் மரணித்த ஒரு முஃமினின் அஸ்தியை மண்ணில் புதைத்து விடுவது நல்லது என இலங்கை அறிஞர்கள் முடிவு செய்தனர்.

இதில் என்ன தப்பு இருக்கின்றது? அவர்கள்தான் உங்கள் ஜமாத்தினரில்லையே. இவ்வளவு காலமும் அவர்களை நீங்கள்தானா? வழிநடத்தினீர்கள்? பீ.ஜே அவர்களே!

சரி ஒரு ஜனாஸாவின் சாம்பலை தூவித்தான் விட வேண்டும். அடக்கமே செய்யக் கூடாது என்று இறைத் தூதர் தடுத்தது போல நீங்கள் விவாதம் செய்வதாக இருந்தால்,

 [عن عقبة بن عامر:] ثَلاثُ ساعاتٍ كانَ رَسولُ اللهِ ﷺ يَنْهانا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ، أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتانا: حِينَ تَطْلُعُ الشَّمْسُ بازِغَةً حتّى تَرْتَفِعَ، وَحِينَ يَقُومُ قائِمُ الظَّهِيرَةِ حتّى تَمِيلَ الشَّمْسُ، وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حتّى تَغْرُبَ.
صحيح مسلم

சூரியன் உதயமாகி உயர்ந்து கொண்டிருக்கும் போதும், சூரியன் உச்சியில் இருந்து கொண்டிருக்கும் போதும் சூரியன் மறைவதற்கு சாய்ந்து கொண்டிருக்கின்ற போதும்
மூன்று நேரங்களில் எமது ஜனாஸானாக்களை தொழுவிப்பதையும் அடக்கம் செய்வதையும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் (முஸ்லிம்) எனத் தெளிவான தடை வந்ததைப் போன்றதொரு ஒரு சான்றை நீங்கள் முன்வைக்காதவரை சாம்பல் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை மார்க்கம் எதுவும் கூறாது மௌனம் காத்த, அல்லாஹ் மன்னிப்பளித்து, விட்டு விட்ட விஷயங்களில் உள்ளடக்கப்பட்டு பார்க்கப்பட்டு புதைப்பது என்பது மார்க்கத்திற்கு முரணான ஒன்று அல்ல என முடிவு செய்ய முடியும்.

குர்ஆன் ஓதுவது வணக்கம் சார்ந்த அமலாக இருந்தும் குளிப்புக் கடமையான நிலையில் குர்ஆன் ஓதுவது தடை இல்லை எனத் தலை கீழாக விளக்கம் தரும் நீங்கள் ஜனாஸாவின் சாம்பலை எடுத்து அடக்கம் செய்வதாகக் கூறுவோரை ஏழனமாகப் பார்க்கின்றீராகளே! அது ஏன்? நீங்கள் உலக அறிவாளி?! மற்றவர்கள் அனைவரும் மடையர்கள் என்ற மமதைதானே!

?சரி புகாரியில் இடம் பெறுகின்ற ஹதீஸில் தனது உடலை எரிக்கச் சொன்ன குறித்த மனிதன் மறுமையை நிராகரித்ததனால்தான் அவ்வாறு செய்தானா? இல்லையே? அல்லாஹ் என்னை ஒன்று சேர்த்தால் அவன் தன்னை வேதனை செய்வான் என அஞ்சியதே காரணம் எனவும் இந்த அச்சமே அந்த மனிதன் மன்னிக்கப்படக் காரணமாகவும் அமைந்ததாகஅதில் தெளிவாக இடம் பெற்றுள்ளதே!

அல்லாஹ்வின் தண்டனை பற்றிய உச்சகட்டமான அச்சமே தன்னை எரித்து தனது சாம்பலைக் கடலில் தூவி விடுங்கள் எனக் கூறினான். இதை மறுக்க என்ன இருக்கின்றது ?

?சரி மாற்றுக் கருத்துடையோர் இதை ஏற்றுக் கொண்ட அடிப்படையில் அந்த சாம்பலை எறிந்து விட வேண்டியதுதான் என சர்வசாதாரணமாக புலம்பும் இவர், அந்த ஹதீஸில் இடம் பெறும் அடிப்படையில் ?வரும் காலங்களில் பாவம் செய்தோர் தமது சடலங்களை எரிக்கலாம் எனக் கூறுவாரா?? என்ன?

?அது சரி. இவர் இந்த ஹதீஸில் எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டைப் போல சூனியம் பற்றிய ஹதீஸிலும் மற்றும் பல ஹதீஸ்களிலும் தனது கருத்துக்கு முரணான அமைப்பினர்களோடுள்ள அணுகுமுறையை எடுத்திருக்கலாமே! தேவைக்கு மாத்திரம் பாவிக்க ஹதீஸ் என்ன தொடுகாயா?

இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் மரணித்த பின்னால் உயிர் கொடுத்து எழுப்புவது எப்படி என அல்லாஹ்விடம் கேட்க அல்லாஹ், أكفرت நிராகரித்து விட்டாயா? என்றா கேட்டான்? இல்லையே
قال أولم تؤمن ؟
(இப்ராஹீமே) நீ ஈமான் கொள்ள வில்லையா என்றே கேட்டான். இதனால் இப்ராஹீம் நபி நிராகரித்தார் என தலைகீழாக விளங்கலாமா?

نحن أحق بالشك من إبراهيم

சந்தேகப்பட இப்ராஹீமை விட நாமே அருகதை உடையவர்கள் (புகாரி) என இறைத் தூதர் அவர்கள் கூறியது சந்தேகத்தில் வாழலாம் என்பதா பொருள்? அவ்வாறே அந்த மனிதன் பற்றிய செய்தியும் என அறிஞர்களைப் போன்று விளங்கினால் குழப்பம் இல்லையே!

?
சரி ! அமிலத்தில் போட்டு கரைத்தாலும் கரையாத, அதி கூடிய வெப்ப அளவில் வைத்து எரித்தாலும் எரியாத வால் எலும்பின் நுணிப்பகுதி “அஜ்புஸ்ஸனப்” என்ற ஒரு அற்புதம் மனித உடலில் இருக்கின்றதே! அதில் இருந்துதான் மனிதன் உயிர் கொடுக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்காக எழுப்பப்படுவான் என ஹதீஸ்கள் உறுதியாகக் கூறுவதை நவீன
விஞ்ஞானமும் சரி காண்கின்றதே! அதற்காவது ஒரு கண்ணியம் இல்லையா?

☝️பீ.ஜே.என்ற வழிகேடரை விட அறிவில், இறையச்சத்தில் மேலான ஒழுக்கத்தில், பண்பாட்டில் உயர்ந்த நூற்றுக் கணக்கான அறிஞர்கள் இதனை ஏற்றுக் கொண்டதை இவர் மறுப்பாராம். அவரே மறுத்ததைச் சரி கண்டு விளக்கம் வேறு சொல்லுவாராம். நல்ல புத்தி!

பீ.ஜே. காஃபிரான தருணம்

மர்யம் அத்தியாயத்தில் ஈஸா நபி (அலை) அவர்களின் அற்புத பிறப்பைப் பற்றி அல்லாஹ் கூறுவதை இவர் உலக தஃப்ஸீர்த் துறை தலைவர் போல ஈஸா நபி (அலை) அவர்கள் குலோனிங் கருத்தரிப்பு முறையில் பிறந்தவர் என هين அது அல்லாஹ்வாகிய எனக்கு எளிதானது என்று இடம் பெறும் இடத்தில் ஈஸா நபி அவர்கள் குளோனிங் முறைப்படி பிறந்துள்ளார்கள் எனக் கூறும் வழிகேட்டை அரங்கேற்றி நபிமார்கள் வரலாறு தொடர் நிகழ்ச்சியில் அல்லாஹ்வின் ஆற்றலை அப்படியே மழுங்கச் செய்தாரே ! ஆட்டு மந்தை களுக்கு விளங்கியதா?

சரி மந்தைகளே மரணித்த பின்னால் உயிர் கொடுத்து எழுப்புவதும் எனக்கு எளிதானது என அல்லாஹ் கூறுகின்ற வசனத்தில் நாமும் முயற்சி செய்தால் மரணித்தவர்களை உயிர்ப்பிக்கலாம் என விளங்கலாமா?


எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி
11/04/2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *