Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் (page 3)

ஒழுக்கம்

புகைத்தலைப் புதைக்க ரமளான் ஓர் அரிய சந்தர்ப்பம்! [உங்கள் சிந்தனைக்கு… – 032]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “உறுதியான தீர்மானத்தை உண்மையாகவே எடுத்து, தீங்கை ஏற்படுத்தும் மோசமான இந்த புகைத்தலிலிருந்து விடுபட விரும்புபவருக்கு ரமளான் மாதம் ஓர் அரிய சந்தர்ப்பமாகும். ரமளானின் பகல் பொழுதில் புகைக்காமல் தடுத்துக்கொண்டிருந்தவருக்கு (புகைத்தலை விடுவதற்கான சிறந்த) சந்தர்ப்பமாகவே இதை நான் பார்க்கிறேன். அல்லாஹ் இவருக்கு ஆகுமாக்கி இருக்கும் உணவிலிருந்தும் பானத்திலிருந்தும் உட்கொள்வதன் மூலம் இரவிலும் இப்புகைப் பழக்கத்தை விட்டும் இவர் முடியுமானவரை விலகிவிட …

Read More »

உங்கள் பிள்ளைகள் உங்களுக்கெதிராக அல்லாஹ்வின் முன்னிலையில் வாதிடக்கூடாது! [உங்கள் சிந்தனைக்கு… – 031]

“உங்கள் மகனோ அல்லது மகளோ ஏன் அவர்களை நீங்கள் சுற்றுலாவுக்காக அழைத்துச் செல்லவில்லை என்றோ, அல்லது எலக்ட்ரானிக் சாதனங்களை ஏன் அவர்களுக்கு நீங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என்றோ, அல்லது உடற்பயிற்சி கிளப்களில் அவர்களை நீங்கள் ஏன் சேர்த்துவிடவில்லை என்றோ, அல்லது மார்க்கெட்டுகளுக்கு ஏன் அவர்களை நீங்கள் கூட்டிச்செல்லவில்லை என்றோ நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் உங்களைப் பற்றி முறைப்பாடு செய்யவேமாட்டார்கள். என்றாலும் அவர்கள், அல்லாஹ்விடம் தமது முறைப்பாடுகளை இப்படிக் …

Read More »

கரும்பு தின்னக் கூலியா…

உறவினரின் வீட்டு விசேசம் ஒன்றில் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்த அந்த வயதான பெண்ணும் நானும் குசலம் விசாரித்துக் கொண்டோம். அவரது பேச்சில் எப்போதும் விரக்தி கலந்திருக்கும். இளவயதிலேயே கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக இருந்து தனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி தற்போது பேரப்பிள்ளைகள் கண்டுவிட்ட நிலைமையிலும்கூட கடந்தகால வடுக்களால் நொந்து போனவர். நம்பிக்கையானவர்களிடம் முறையிடுவதால் தன் மனப் பாரம் குறையும் என்று அவர் எண்ணியிருக்கக்கூடும். அந்தவகையில் என்னுடனான அன்றையச் சந்திப்பும் …

Read More »

காவோலைகள்

உங்களின் தோல் சுருக்கங்களில் மறைந்து கிடக்கின்றன வாழும் யுக்திகள் அந்தக் கூன்விழுந்த முதுகில்தான் எம் வாழ்க்கை ஒத்திகை பார்க்கிறது உங்களது அனுபவ நரைகள் எமது குறைகளைச் சிரைக்கும் கத்தி அந்த விரல்கள் பட்ட ஊன்றுகோலின் சிராய்ப்பும் எங்களுக்கு ஆசான் பேசுங்கள் அது எங்கள் வரலாறு இன்னும் பேசுங்கள் அது உங்கள் கடந்தகால வலி இன்னும் இன்னும் பேசுங்கள் அதுவே எமக்கு மருந்து உங்களுக்காய் தியாகித்த பேரூந்தின் இருக்கையில் கிடைக்கிறது ஓராயிரம் …

Read More »

சிறிய தியாகம்தான்

வீட்டின் மேலதிகச் செலவை ஈடு செய்வதற்காக நகையொன்றை அடகு வைப்பது பற்றி கணவன், மனைவிக்குள் நடந்த உரையாடலைச் செவியுற்ற அவர்களது ஒன்பது வயது மகன் “இல்லம்மா… அடகு வைக்காதீங்க… அது வட்டி…” என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான். ஏற்கெனவே ஜும்ஆவொன்றில் நிகழ்த்தப்பட்ட உரையொன்றினை செவிமடுத்ததன் விளைவாகத்தான் மகன் இவ்வாறு பேசுகிறான், எனக்கூறி உள்ளூர சந்தோசப்பட்ட இருவரும் அவனது கோரிக்கைக்கு மதிப்பளித்து அவ்வெண்ணத்தை கைவிட்டார்கள். இப்போது சிறுவனுக்கு சோதனையொன்று காத்திருந்தது. ஒரு வாரமாக …

Read More »

அந்தக் காரியாலயம்

பலவருடங்களாக சொந்த ஊரில் கடமையாற்றிய எனக்கு, வெளியூர் காரியாலயத்தில் இடமாற்றம் கிடைத்திருந்தமை, நல்லதோர் திருப்புமுனையாக அமைந்தாலும், அது சகோதரமொழிக் காரியாலயம் என்பதுதான் ஜீரணிப்பதற்குச் சற்றே கடினமாக இருந்தது. அதுவும் அங்குள்ளவர்களிடம் இருந்து அந்நியப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் வேறு ஒட்டிக் கொண்டதுடன், முற்றிலும் மாறுபட்டதொரு சூழலுக்கும் பஸ்வண்டிப் பிரயாணத்திற்கும் பழக வேண்டியும் இருந்தது. எது எப்படியோ புதுக்காரியாலயம் வந்தாயிற்று. வேறு உத்தியோகத்தர்கள், வேறுகாரியாலயம், வேறு நிருவாகம் என்று எனது உலகம் …

Read More »

தேன்கூட்டு உறவுகள்

எனது உறவினர் ஒருவரின் மகனுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வழமைபோன்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிலும் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டிலுமாய் சம்பிரதாயங்களையும் சந்தோசங்களையும் பகிர்ந்துகொண்டனர். திருமணம் முடிந்த மறுநாள் தம்பதிகள் சிலநாட்களுக்கு மாமியாரின் இருப்பிடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மணமகன் அரசாங்க உத்தியோகத்தர் என்பதால் திருமணத்தின் பின்னர் பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன் வீட்டுக்கு வந்திருந்தார். வழமையாக அவரது முதல் வேலை தாயின் கையில் அந்த மாதத்திற்கான செலவுத் …

Read More »

எதிர்கால முத்துக்கள்

– பர்சானா றியாஸ் – ஊர்ப் பாடசாலையில் பெற்றோருக்கான கூட்டம் நடைபெற்றது. தரம் ஆறிற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களின் பெற்றோரைப் பிரதானப்படுத்தி, மாணவர்களின் நடத்தைகள் தொடர்பான கலந்துரையாடலாக அந்தக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. நீண்ட கால இடைவெளியின் பின்னரான இவ்வேற்பாட்டில் அதிக எண்ணிக்கையிலான பெற்றோர்களைக் காணக்கிடைத்தது. ஆசிரியரும் பெற்றோரும் அடிக்கடி சந்தித்து மாணவர்கள் தொடர்பான நடத்தைக் கோலங்களை கலந்துரையாடுவது காலத்தின் தேவையே. பிள்ளைகளுடன் அதிக நேரத்தை கடத்துபவள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு …

Read More »

உயரிய பண்பாடுகளை வளர்த்துகொள்வது எப்படி?

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் இஸ்லாமிய பண்பாட்டியியல் மாநாடு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 19-01-2018 (வெள்ளிக்கிழமை) தலைப்பு: உயரிய பண்பாடுகளை வளர்த்துகொள்வது எப்படி? வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »

நாவும், நரகமும்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 26-10-2017 தலைப்பு: நாவும், நரகமும் வழங்குபவர்: அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், தம்மாம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkavi Media Unit

Read More »