Featured Posts
Home » பொதுவானவை (page 95)

பொதுவானவை

குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-1)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) இஸ்லாமிய நெறியில் குழந்தை வளர்ப்பு எனும் போது அவர்களது லௌகீக நலன் நாடிய ஆளுமைகள் மட்டுமன்றி, அவர்களின் ‘ஹிதாயத்’ எனும் ஆன்மிக ஆளுமை விருத்தியும் நோக்கமாகக் கொள்ளப்படும். இந்த வகையில் குழந்தைகளின் ஆன்மிக-லௌகீக முன்னேற்றத்திற்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அதற்காக அவர்கள் காட்டிய வழிமுறைகளை இங்கே சுருக்கமாகத் தொகுத்துத் தர விரும்புகின்றோம்.

Read More »

அச்சமூட்டும் இயற்கைச் சூழ்நிலை

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) டிசம்பர் 26 மறக்க முடியாத தினம்! இலட்சக்கணக்கான உயிர்களைக் குடித்துக் கோடிக்கணக்கான சொத்துகளைக் காவு கொண்ட தினம்! பூவுக்குள் பூகம்பம் போன்று நீருக்குள் இவ்வளவு ஆக்ரோஷமா? தண்ணீருக்கு இப்படியொரு சக்தியா? எனத் திறந்த விழிகளை மூடாமல் மக்களை அதிர வைத்த தினம்! ஆறு வருடங்கள் உருண்டோடி விட்டாலும் டிசம்பர் வரும் போது கடலோரப் பிரதேச மக்களைச் சுனாமி அச்சம் தொற்றிக்கொள்கின்றது.

Read More »

நபிகள் நாயகத்தின் தீர்ப்பை நோக்கி நகருமா முஸ்லிம் காழி நீதிமன்றங்கள்?

-அபூ நதா மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனிலும், அண்ணல் நபியின் போதனைகளிலும் தீர்வுகளைக் காணலாம், அவற்றில் நீதித்துறை சார்ந்த சட்ட திட்டங்களும் உள்ளடங்கும். இஸ்லாமிய நீதித்துறை பற்றியும், அதன் தீர்ப்புக்கள் பற்றியும் அறியாத அரைகுறைகளால் இஸ்லாமிய சட்டங்கள் அர்த்தமற்ற முறையில் விமர்சிக்கப்படுகின்றதே தவிர புத்தி ஜீவிகளால் அவை என்றும் விமர்சிக்கப்பட்டதில்லை.

Read More »

வளரும் தலைமுறையினரும் கல்வியும்

வழங்குபவர்: மௌலவி M.J.M. ரிஸ்வான் மதனி (அபூ நாதா) நிகழ்ச்சி: அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு வழங்கும், 12வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு இடம்: தஃவா நிலையத்தின் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 09.04.2010 Download video – Size: 186 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/7uxqf0qv19y6dl3/youth_and_education_ridwan.mp3] Download mp3 audio – Size: 41.2 MB

Read More »

ஹாஜிகளே!, இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்! உள்ளத்தின் கதவுகள் திறக்கட்டும்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கலிமா, தொழுகை, நோன்பு என்பன உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்ட வணக்கங்களாகும். “ஸகாத்” பணத்துடன் மட்டும் சம்பந்தப்பட்ட இபாதத்தாகும். ஆனால் ஹஜ் பணத்தாலும், உடலாலும் செய்யப்படும் தியாகமாகும். எனவே ஹஜ் ஏனைய இபாதத்களை விடச் சற்று மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும்.

Read More »

கர்கரே -ஐ கொலை செய்தது யார்? – புத்தகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்

S.M.முஷ்ரீஃப் I.P.S. (முன்னால் மகாராட்டிர மாநிலத்தின் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அவர்கள் எழுதிய ஹேமந்த் கர்கரே -ஐ கொலை செய்தது யார்? என்ற புத்தகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம். வழங்குபவர்கள்: M. குலாம் முஹம்மது (எழுத்தாளர், வேர்கள் வெளியீட்டகம்), தீரு அருணன் (எழுத்தாளர்), T. லஜபதிராய் (அட்வகேட், வைகை சட்ட அலுவலகம்), S.M.முஷ்ரீஃப் I.P.S. (மகாராட்டிர மாநிலத்தின் முன்னால் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல்). நாள்: 14-03-2010 …

Read More »

உங்கள் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துங்கள்!

– Dr. M.M. அப்துல் காதிர் உமரீ H.H.A., M.D., (Acu)., “உங்கள் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துங்கள்” எனும் நூலை ஜீரோ பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இஸ்லாமிய அறிவை மேம்படுத்திக் கொள்ளும் விதத்தில் இந்தூல் அமைக்கப்பட்டுள்ளது. Download PDF format eBook 26 Pages

Read More »

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 9)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) ஆயிஷா(ரலி) அவர்களின் கூற்று குர்ஆனில் குறையேற்படுத்துமா? சகோதரர் பீஜே அவர்கள் தனது தர்ஜமதுல் குர்ஆன் விளக்கவுரையில் மறுத்த 2 ஹதீஸ்கள் குறித்த உண்மை நிலையை இது வரை 13 தொடர்களில் நாம் பார்த்துள்ளோம். அவர் மறுக்கும் மற்றுமொரு செய்தி குறித்த தெளிவை மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தொடர் மூன்றினூடாக வழங்க முற்படுகின்றோம்.

Read More »

புகை! உனக்குப் பகை!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) வளர்ந்து வரும் தீமைகளில் புகைத்தல் பழக்கம் என்பது முக்கியமானதாகும். இன்றைய இளைஞர்களைத் தொற்றிக்கொள்ளும் ஆபத்துகளில் இது பிரதானமாகும். கட்டிளம் பருவ இளைஞர்கள் தான் பெரியவனாகி விட்டேன் என்பதற்கான ஒர் அடையாளமாகப் புகைத்தலைக் கருதுகின்றனர். மற்றும் சிலர் தானும் வளர்ந்து சமூகத்தில் ஓர் அங்கம் என்பதன் அடையாளமாகப் புகைத்தலை எடுத்துக்கொள்கின்றனர்.

Read More »

(இலங்கையில்) தவ்ஹீத் எழுச்சி

– மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ அறிமுகம்: இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மையாக இருந்த போதிலும் முஸ்லிம்களிடம் இஸ்லாமிய எழுச்சி கடந்த 60 வருடங்களுக்கு முன்னர் தான் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய இயக்கங்களின் பிரவேசம் இதற்கு முக்கிய காரணமாகும். இந்த மார்க்க ரீதியான எழுச்சியில் அகில இலங்கை ஜமாஅத் அன்சார் சுன்னா அல்-முஹம்மதிய்யா வுக்கும் பெறும் பங்கு உள்ளது எனலாம்.

Read More »